தமிழக செய்திகள்

பூலாம்பட்டியில் ரூ.22 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

பூலாம்பட்டியில் ரூ.22 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

எடப்பாடி

பூலாம்பட்டியில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. பருத்தி ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளான பூலாம்பட்டி, குப்பனூர், நெடுங்குளம், கோனேரிப்பட்டி பகுதிகளில் இருந்து இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 650 மூட்டைகள் 160 லாட்டுகளாக வைக்கப்பட்டு ரூ.22 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 499 முதல் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 249 வரை ஏலம் போனது.