தமிழக செய்திகள்

பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

பள்ளிபாளையத்தில் பழைய இரும்பு குடோனில் தீப்பிடித்து எரிந்தது

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையில் ராஜகுரு என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் அங்கு பழைய இரும்புகள், காகிதங்கள், அட்டைகள், வாங்கி மொத்தமாக விற்பனை செய்வது வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு குடோனில் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. இதில் குடோனில் இருந்த பேப்பர்கள், வயர்கள், அட்டைகள் அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஈரோடு மற்றும் வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? எவ்வளவு சேதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.