தமிழக செய்திகள்

அக்கரைப்பட்டியில் ரூ.80 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அக்கரைப்பட்டியில் ரூ.80 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி

ராசிபுரம்:

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் அக்கரைப்பட்டியில் பருத்தி ஏலம் நடந்தது. மல்லசமுத்திரம், வையப்பமலை, பெரியமணலி, சின்ன மணலி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னாம்பள்ளி, சவுதாபுரம், நாட்டாமங்கலம், எலச்சிபாளையம், கோக்கலை உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வந்தனர். சேலம், ஆத்தூர், ராசிபுரம், அவினாசி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2,338 சுரபிரக பருத்தி மூட்டைகள் ரூ.80 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் சுரபி ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7,500-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9,019-க்கும் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது