தமிழக செய்திகள்

கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தினத்தந்தி

குழித்துறை:

நல்லூர் பேரூராட்சி அலுவலகம் குழித்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது பேரூராட்சி பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதியுடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பேரூராட்சி அலுவலகத்தை தற்போது அமைந்துள்ள பகுதியில் இருந்து முள்ளஞ்சேரி பகுதிக்கு இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பேரூராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். மேலும் அவசரமாக கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நல்லூர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் நடந்த இந்த போராட்டத்திற்கு பேரூராட்சி துணைத் தலைவர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் எட்வின் ராஜகுமார், திவ்யா, அனீஸ் நிஷா, சுபியா, ஜெயபாலன், நிர்மல் ராவண்டீஸ், பாலசேகரன், ராஜன், புஷ்பலதா, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் இரவிலும் நீடித்தது. பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை