தமிழக செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விரைவில் தொடக்கம்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவப்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்பு மாணவர் சேர்க்கை 'முதுநிலை நீட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்ததேர்வை, மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்) நடத்துகிறது.

நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் 170 நகரங்களில் 500 தேர்வு மையங்களில் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இந்ததேர்வை, நாடுமுழுவதும் 2.28 லட்சம் டாக்டர்கள் எழுதினர்.

இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், முதுநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து