தமிழக செய்திகள்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் பெருந்துறைபட்டில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி செல்வநாராயணன், துணைத்தலைவர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பாபு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர்கள் அர்ச்சனா பிரபா, இளஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு சாலை விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வளாகங்கள் தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி பேராசிரியர் துரைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அருண்குமார் செய்திருந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்