தமிழக செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

விவேகானந்தா மெட்ரிக்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

தினத்தந்தி

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் ஜோஸ்வா பிரபாகர்சிங் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திராவிட மணி வரவேற்றார். முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, சமூக ஆர்வலர் அம்பேத்கர் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி முழுவதும் உள்ள பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி முகாம் அலுவலர் அருண் ராஜ் நன்றி கூறினார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை