தமிழக செய்திகள்

ரூ.1½ கோடி மோசடி வழக்கில் தம்பதி கைது

வேடசந்தூரில் ரூ.1½ கோடி மோசடி வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த பூதிபுரம் பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி சிலர் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பூதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்களிடம் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக 9 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் பூதிபுரத்தை சேர்ந்த சுகன்யா, பொன்ராஜ், தினேஷ் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (53), அவருடைய மனைவி பரமேஸ்வரி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?