தமிழக செய்திகள்

வியாசர்பாடியில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

வியாசர்பாடியில் கடன் தொல்லையால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை வியாசர்பாடி ஜோதி ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 68). இவரது மனைவி பாக்கியலட்சுமி (55). சங்கர் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சங்கருக்கு யானைக்கால் நோய் ஏற்பட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மளிகை கடையில் போதிய வருமானம் இல்லாததால் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த தம்பதி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதே போல் திருவொற்றியூர் கார்கில் நகர் முகிலன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (35). இவரது 2-வது மனைவி ரேணுகாதேவி. இந்நிலையில் நேற்று காலை கடன் தொல்லையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு