தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரமும் செய்ய உள்ளார். விஜய் ஒரு இடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. , மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து திறந்த வேனில் நின்றபடி, தொண்டர்களுக்கு கை அசைத்தபடி விஜய் வந்தார்.அப்போது, விஜய்யை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதி அங்கு விபத்தில் சிக்கினர். இதைக் கவனித்த விஜய் உடனடியாக வேனில் இருந்து இறங்கி சென்று, அவர்களை நேரில் நலம் விசாரித்தார். பின்னர் தனது வேனில் புறப்பட்டுச் சென்றார்.
விஜய்யை பின்தொடர்ந்து யாரும் பைக்கில் வரக்கூடாது என்று கட்சி தலைமையகம் எச்சரித்தும், இதை பொருட்படுத்தாமல் இன்றும் தவெக தொண்டர்கள் விஜய் வேனை பின்தொடர்ந்து வந்ததை காண முடிந்தது