தமிழக செய்திகள்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் தங்க தமிழ்செல்வன் பேட்டி

கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார். இது குறித்து தங்க தமிழ்செல்வன் கூறியதாவது.

தினத்தந்தி

சென்னை,

என் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து அட்வகேட் ஜெனரலிடம் இருந்து எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக பத்திரிகை வாயிலாக தான் தெரிந்து கொண்டேன். நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் என் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இதை மனதார பாராட்டுகிறேன்.

அதேவேளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் செல்லமேஸ்வரர் உள்பட 4 பேர் பகிரங்கமாக குற்றச்சாட்டை எழுப்பினர். கடந்த ஜனவரி மாதம் தலைமை நீதிபதி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தினர்.

அந்த பெண் வக்கீல் இதுகுறித்தும் ஒரு வழக்கு போட்டு, சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கலாமே? நான் ஒரு சாதாரண நபர் என்பதாலேயே அந்த பெண் வக்கீல் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

உண்மையிலேயே நீதி வெற்றி பெற்றிருக்கவேண்டும் என்றால், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டு இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்களும் தான் அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆனால் எந்தவித தவறும் செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. எனக்கு அனுப்பப்பட்டதாக கூறிய அந்த விளக்க நோட்டீஸ் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அந்த நோட்டீஸ் கிடைத்ததும், அதில் கூறப்பட்டவைகளை படித்து, சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து