தமிழக செய்திகள்

'நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல' - நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கண்டனம்

மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது

தினத்தந்தி

சென்னை,

நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையம் என்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறி தனது முன்ஜாமீன் மனுவை அவர் வாபஸ் பெற்றார். பின்னர் புதிய மனுவை அவர் தாக்கல் செய்தார்.

இதற்கு நீதிபதி அல்லி கடும் கண்டனம் தெரிவித்தார். 'நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல.  நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்று அவர் தெரிவித்தார்.மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?