சென்னை,
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் செயலாளராக இருந்த சரவணன், பணி ஓய்வு பெறும் நாளில் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, சரவணன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் துணைவேந்தர் ஜெகநாதன் செயலுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. மேலும் சரவணனின் பணியிறக்கம் செல்லாது என ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.