தமிழக செய்திகள்

சென்னையில் இன்றும், நாளையும் கோவாக்சின் தடுப்பூசி போடலாம் - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் இன்றும், நாளையும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி செலுத்த துவங்கிய நேரத்தில் இருந்ததை விட தற்போது பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு, சில நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி கிடைத்த பின்னர் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் கடந்த சில தினங்களாக பல்வேறு மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டிருந்ததால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதிலும் குறிப்பாக பலர் 2-வது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்றும் நாளையும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தடுப்பூசி மையத்தில் திரண்டு வந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும் சென்னையில் உள்ள பல்வேறு மையங்களில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு