தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை- மு.க ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை என முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

தினத்தந்தி

கோவை,

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கோவை சென்ற முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப் படவில்லை. எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் இருக்கும்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களில் சிறப்பு அதிகரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் கொரோனா சிகிச்சை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

கோவையில் 2 இடங்களில் சிறப்பு சித்தா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் இதுவரை 5.85 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் பணியாளர்களை ஊக்கப்படுத்தவே நானும் பிபி இ கிட் அணிந்து ஆய்வு செய்தேன்.

தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. கோவையில் கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்த அமைச்சர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர் என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது