சென்னை,
கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன.
அதன்படி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
இந்த தடுப்பூசி முதல் கட்டமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தலா 300 பேரிடம் பரிசோதனைநடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி 3 ஆம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் .
மேலும் இந்த தடுப்பூசி வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும். அதன் பின்னர் 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது.