மதுரை,
மதுரையில் 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட ஐராவதநல்லூர் கல்லம்பல் சாலையில் 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் அந்த பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவருக்கு சொந்தமான பசு மாடு மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வந்தபோது தவறி விழுந்தது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் கணேஷ் மற்றும் வீரர்கள் திருநாவுக்கரசு, சதீஷ்பாண்டி உள்ளிட்டோர் அங்கு சென்று பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.