சென்னை,
சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து ஆளுங்கட்சியான தி.மு.க. களம் இறங்கியது. அவ்வாறு கூட்டணி அமைத்தும் தி.மு.க. 59 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று மோசமான தோல்வியை தழுவியது. குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். இது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையில் தற்போது மேலும் ஒரு இடியாக தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து, த.வெ.க. ஆட்சியமைக்க முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. இப்படி இருக்கும் சூழலில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் எம்.எல்.ஏக்கள் செல்லசாமி, லதா ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். பரபரப்பான அரசியல் சூழலில் ஸ்டாலினை சிபிஎம் எல்.ஏக்கள் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது