சென்னை,
சென்னை பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரத்தில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது வீட்டில் திடீரென முதலை ஒன்று வந்துள்ளது. அவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் முதலை இருப்பதாக அலறி அடித்து அங்கிருந்து ஓடி வந்துள்ளனர். இதனை கண்ட மக்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர்.
அப்போது விஜயகுமார் அங்கு வந்து வீட்டின் வெளியே இருந்த 2 அடி கொண்ட முதலையை பிடித்து பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்த பகுதியில் உள்ள பெரிய ஏரியில் அதிக அளவு முதலைகள் இருப்பதாகவும், அதனை அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.