தமிழக செய்திகள்

பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

சென்னை,

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பிரிமியம் தொகை கட்டுவதற்கு கடந்த மாதம் 31-ந் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 1.63 லட்சம் ஏக்கருக்கு தான் பயிர் காப்பீடு தொகை செலுத்தி உள்ளனர். மீதம் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை.

எதிர்பாராதவிதமாக இயற்கையின் சீற்றத்தால் இழப்பு ஏற்படுமானால், விவசாயிகள் பயிர் இழப்பீடு பெற முடியாமல் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள். எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். 2019-2020-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பு தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு