தஞ்சாவூர்,
தஞ்சையில் குறுவை சாகுபடி தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கூட்டுறவு சங்கங்களை நாடி வரும் உறுப்பினர் அல்லாத விவசாயிகளையும் உறுப்பினர்களாக சேர்த்து அவர்களுக்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே சமயம் சிறு, குறு விவசாயிகள் என அனைவருக்கும் வங்கிகளில் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.