தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகைய முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமாகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. பின்னர் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்க காலை 7 மணியில் இருந்தே படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர். சுற்றுலா பயணிகளின் வருகையால் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு