தமிழக செய்திகள்

75-வது சுதந்திர தினத்தை கவுரவிக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் சைக்கிள் பயணம்

கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை 2,850 கி.மீ. தூரத்திற்கு பாதுகாப்பு படையினர் சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை கவுரவிக்கும் விதமாக மத்திய பாதுகாப்பு படையினர் கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். தென்மண்டல சி.ஆர்.பி.எப். சார்பில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் மேடை அமைத்து வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் இந்த சைக்கிள் பயணம் தொடங்கியது.

இவர்கள் சைக்கிள் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா வழியாக டெல்லி ராஜ்காட் வரை சுமார் 2,850 கி.மீ. பயணிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பாதுகாப்பு படையினரின் சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்