நாகை,
நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எண்ணெய் கசிவை 2 முறை சரி செய்ததாக சிபிசிஎல் அறிவித்த நிலையில் இன்று மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று பம்பிங் செய்தபோது, மற்றொரு குழாய் உடைந்தது.