தமிழக செய்திகள்

ஊரடங்கை மக்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கை மக்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, பல இடங்களில் 26-ந்தேதி (இன்று) தொடங்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை அனைவரும் உறுதியுடன் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வீதிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் நெரிசல் அதிகமாவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்கவும், அப்போது தனிமனித விலகலைக் கடைப்பிடித்து மக்கள் பொருட்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு