மேட்டூர்,
மேட்டுர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106.6 அடியாக உள்ளது. அணைக்கு தற்போது 1,235 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டுர் அணையில் 73.7 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.