தமிழக செய்திகள்

காவல்துறை பாதுகாப்பு கோரி சி.வி.சண்முகம் வழக்கு - தமிழக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழக அரசு உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விளக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது காவல்துறை பாதுகாப்பு பெற முடியும் என்ற உரிமை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், பாதுகாப்பு ஆய்வுக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் வாபஸ் பெறப்பட்டது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழக அரசு உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது. மேலும் பாதுகாப்பு கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்