தமிழக செய்திகள்

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

பழனியாண்டவர் கலைக்கல்லூரியில்சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில், சைபர் குற்ற தடுப்பு அமைப்பு சார்பில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மனோகரன் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, செல்போனில் அழைத்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி விவரங்களை கேட்டால் கொடுக்க கூடாது, பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பிறருக்கு அனுப்ப கூடாது, ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளை தவிர்ப்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்த விழிப்புணர்வு முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை