தமிழக செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இன்று நடைபெறுவதாக இருந்த மத்திய பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதே போன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் இன்றும் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறுவதாக இருந்த தேதிகள் டிசம்பர் 14 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாக 4 கல்லூரிகளிலும் திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் வரும் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்