சென்னை,
தமிழகத்தை கடந்த 16-ந்தேதி தாக்கிய கஜா புயலினால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. பல லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து கிடைக்கிறது. விவசாயிகள் எளிதில் மீளமுடியாத துயரத்தை புயலின் தாக்கம் ஏற்படுத்தி சென்றுள்ளது. இதற்கிடையே தமிழக அரசு தென்னை மரங்களுக்கு வழங்கும் நிவாரண நிதியும், அகற்றுவதற்கு வழங்கும் தொகையும் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் கலைச்செல்வன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கஜா புயல் தாக்குதலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றபோது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.