சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 3.1 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி, மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.