தமிழக செய்திகள்

மிக்ஜம் புயல், கனமழை: தெற்கு ரெயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு

புறநகர் ரெயில் சேவை மட்டும் இன்றி, சென்னையில் இருந்து கோவை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

தினத்தந்தி

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதில் ரெயில் நிலையங்களும் தப்பவில்லை. சென்ட்ரல், எக்மோர் உள்ளிட்ட சென்னையில் உள்ள பல்வேறு  ரெயில் நிலையங்களும் வெள்ளத்தில் மிதந்தன. தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி ரெயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புறநகர் ரெயில் சேவை மட்டும் இன்றி, சென்னையில் இருந்து கோவை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இதன் காரணமாக ரெயில்வேக்கு 35 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்