தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் சிலிண்டர் வெடித்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுக்காமூர் தெருவில் வசித்து வரும் சந்திரா என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அருகில் இருந்த வீடுகள் உள்பட 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அந்த வீடுகளில் இருந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதனை தொடர்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின், இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன், உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சிலிண்டர் விபத்து குறித்து அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பியுள்ளதாகவும், உரிய நிவாரண தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலிண்டர் விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது