தமிழக செய்திகள்

பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றார்

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜ பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்த, எம்.என்.பண்டாரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக, எம்.துரைசாமி நியமிக்கப்பட்டார். கடந்த 13ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எம்.துரைசாமி, 21-ம் தேதி ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக உள்ள டி.ராஜா, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து டி.ராஜா பொறுப்பேற்றுக்கொண்டார்.

திபதி டி.ராஜா, மதுரை மாவட்டம், தேனுர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1961 மே 25ல் பிறந்தார். 1988ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். கடந்த, 2008ல், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.கடந்த 2009 மார்ச்சில், சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின் நிரந்தரம் செய்யப்பட்டார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது