சென்னை
தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன் கூறியதாவது:-
தேர்தலுக்கு வாக்களிக்க செல்வோர் கடைசி நேரத்தில் செல்வதை தவிர்த்து, முன்கூட்டியே பயணம் செய்வது நல்லது. பேருந்து நிலையங்களில் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை தொடர்ந்து பரிசோதிப்பது அவசியம்.
பரிசோதனை மேற்கொள்ளாமலேயே கொரோனா குறைந்து விட்டதாக தங்களால் கணக்கு காட்ட முடியும். ஆனால் தாங்கள் அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து கூட்டம் மிகுந்த இடங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.
இதுவரை 25.39 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தொட்டு அதன்பின்னரே குறைய தொடங்கும்
கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளிலும், நகரங்களில் 3,960 தெருக்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 512 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.