தமிழக செய்திகள்

பால் பண்ணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் நாசர் அதிரடி உத்தரவு

பால் பண்ணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை, 

பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நாசர் கூறும்போது ,

மழை நாட்களில் தமிழகம் முழுவதும் பால் மற்றும் பால் உப பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மழை நாட்களில் தமிழகம் முழுவதும் பால் மற்றும் பால் உப பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், பால் பண்ணைகளை கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

மழைக்காலங்களில் கால்நடைகளை பாதிக்கும் நோய்கள் குறித்தும் அவற்றை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்