தமிழக செய்திகள்

மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசுக்கு பா.ஜ.க துணை நிற்கும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு பா.ஜ.க துணை நிற்கும் என அக்கட்சியின் துணை தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் பா.ஜ.க துணை தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ரத்து செய்தால் பா.ஜ.க. எதிர்க்கப்போவதில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். தமிழக மக்களின் நலனை ஒரு போதும் விட்டு தரமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...