தமிழக செய்திகள்

முறிந்து விழும் அபாய நிலையில் மின் கம்பங்கள்

திருக்காட்டுப்பள்ளி அருகே முறிந்து விழும் அபாய நிலையில் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராம வயல்வெளியில் மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இந்த மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழந்தன. இந்தப் பகுதியில் பரவலாக ஆழ்துளை கிணறுகள் மின் இணைப்புடன் அமைந்துள்ளன. வயல்வெளியில் குறுக்கும் நெடுக்குமாக மின்சார கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வயர்கள் சென்று வருகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் அந்த பகுதியில் ஒரு மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழை மற்றும் காற்றை தாங்காமல் கீழே விழுந்து விடக் கூடிய அபாய நிலையில் மின்கம்பம உள்ளது. இதே பகுதியில் மற்றொரு தரிசாக கிடைக்கும் வயலில் எலும்பு கூடாக, சிமெண்டு கான்கிரீட் உதிர்ந்து, மின்கம்பம் காட்சியளிக்கிறது. தற்போது இந்த பகுதியில் முன்பட்ட குறுவை அறுவடை செய்யப்பட்டு உள்ளது. அடுத்த பருவ நடவுக்கு முன்னதாக இந்த பகுதியில் உள்ள சாய்ந்த மின் கம்பங்கள், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து