தமிழக செய்திகள்

குறுவை சாகுபடி பாதிப்பு

சீர்காழி பகுதியில் கன மழை; குறுவை சாகுபடி பாதிப்பு

தினத்தந்தி

சீர்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக குறுவை சாகுபடியில் அறுவடை பணிகள் நடந்து வந்தன. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் நெல்முற்றிய பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன.

அதோடு மட்டுமல்லாமல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் அகற்றப்படாமல் உள்ள வைகோல்களில் தண்ணீர் தேங்கியதால் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது குறுவை சாகுபடியில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. இந்த மழையால் நெல் மணிகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பருத்தி செடிகளிலிருந்து பருத்தி எடுக்கும் பணியும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் பல வயல்களில் வைக்கோல்கள் சேகரிக்காமல் உள்ளது. இந்த மழையால் வைக்கோல்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை