தமிழக செய்திகள்

சேதமடைந்த மின்வாரிய குடியிருப்புகள்

சேதமடைந்த மின்வாரிய குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி பெத்தம்மாள் நகரில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுவதால் தற்போது இங்கு யாரும் வசிப்பதில்லை. பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்யப்படாத நிலையில் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இந்த குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த குடியிருப்புகளை சுற்றி புதர் மண்டி விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆத்திபட்டி மின்வாரிய குடியிருப்புகள் இடியும் நிலையில் உள்ளது. ஊரின் நடுவே இதுபோன்று பாழடைந்த கட்டிடம் இருப்பது பொதுமக்களிடைய ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மின்வாரிய குடியிருப்புகளை முற்றிலும் இடித்துவிட்டு அங்கு மின்வாரிய பணியாளர்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்