தமிழக செய்திகள்

பழுதடைந்த பயணிகள் நிழற்குடை

பந்தலூர் அருகே பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தினத்தந்தி

பந்தலூர்

பந்தலூர் அருகே பொன்னானியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த வழியாக சுல்தான்பத்தேரி, கூடலூர், பாட்டவயல், அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பொன்னானிக்கு வந்து குந்தலாடி, பாட்டவயல், பந்தலூர், கூடலூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால், பொன்னானி பயணிகள் நிழற்குடையில் பயணிகள் காத்து கிடக்கிறார்கள். இதற்கிடையே நிழற்குடையின் மேற்கூரை உடைந்து காணப்படுகிறது. தரைத்தளமும் சிதிலமடைந்து கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் பயணிகள் நிழற்குடையில் ஒதுங்கி நின்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு