சோளிங்கரை அடுத்த தளவாய்ப்பட்டடை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் தற்போது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.