தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மத்தியபிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம்

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மத்தியபிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்தார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மிகவும் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ராமானுஜர் அவதரித்ததால் அவருக்கு தனி சன்னதி அமைந்து உள்ளது. ஆதிகேசவ பெருமாளுக்கு நிகராக ராமானுஜருக்கும் விழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், ஸ்ரீபெரும்புதூர் வந்து ஆதிகேசவ பெருமாளையும், ராமானுஜரையும் பயபக்தியுடன் தரிசனம் செய்தார். பின்னர் கோவில் சுற்றுச்சுவரில் வரையப்பட்ட ஓவியங்களை ரசித்து பார்த்தார். சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்.

முன்னதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவருக்கு கோவில் சார்பாக பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து