தமிழக செய்திகள்

நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் பிளஸ்-2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது

பிளஸ்-2 மறுவாய்ப்பு கடைசித்தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் https://tnresults.nic.in/, https://dge.tn.nic.in/, https://dge1.tn.nic.in, https://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து