தமிழக செய்திகள்

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

தினத்தந்தி

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் மெயின்ரோட்டில் புலிக்குட்டை பகுதியில் ஆதியூர் ஊராட்சிக்கு சொந்தமான ரசூல்கான் ஏரி உள்ளது. இங்கு மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திடீரென ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

எனவே ஏரியில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்