தமிழக செய்திகள்

தர்மபுரி அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

தினத்தந்தி

தர்மபுரி மாவட்டம் மோதூர் அருகே உள்ள போலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 35). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முனியப்பன் நடுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் போர்வெல் அமைப்பதற்கு நேற்று தொழிலாளர்களுடன் சென்றார். அங்கு கிணற்றுக்குள் இறங்கும்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் கிணற்றுக்குள் விழுந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்