மதுரை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த நோய் தொற்றால் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவல் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கடந்த மாதம் ஜூன் 27 ஆம் தேதி கொரோனா உறுதி செயயப்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் செக்காணூரணி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவர்.