தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பாட்டி, பேரன் சாவு

அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாட்டி, பேரன் ஆகிய 2 பேர் இறந்தனர். மேலும் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

அரூர்:

அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாட்டி, பேரன் ஆகிய 2 பேர் இறந்தனர். மேலும் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கூழையகவுண்டர். இவரது மனைவி சின்னம்மாள் (வயது 53). இவரது பேரன் சந்தோஷ் (24), மகள் குமாரத்தி. இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் அரூர் அருகே உள்ள செல்லம்பட்டிபுதூரில் நடைபெற்ற திருவிழாவிற்காக உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

கோவில் திருவிழா முடிந்த பின்னர் அவர்கள் 3 பேரும் நேற்று மாலை ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது பெத்தூரை சேர்ந்த விஜய் (25) என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அரூர் அருகே அண்ணாலம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

2 பேர் சாவு

இந்த விபத்தில் நிலை தடுமாறி சின்னம்மாள், உள்ளிட்ட 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த சந்தோஷ், சின்னம்மாள் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். குமாரத்தி, விஜய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் குமாரத்தியை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குமாரத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜய் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பாட்டி, பேரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்