தமிழக செய்திகள்

தாயார் மறைவு: ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது95). வயது முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 2-ந் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பலரும் இரங்கலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு சென்றிருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் இருந்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்