தமிழக செய்திகள்

விவசாயிக்கு கொலை மிரட்டல்

சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல்

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் மரியதாஸ்(வயது 65). விவசாயியான இவருக்கு சொந்தமான வீட்டில் புத்திராம்பட்டை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த சின்னசாமி மகன் தனபால் என்பவர் சக்கரவர்த்தியிடம் வீட்டை காலி செய்ய வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது. இதை அறிந்த மரியதாஸ் தனபாலிடம் தட்டிக்கேட்டபோது ஆத்திரமடைந்த அவர் மரியதாசை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் தனபால் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை